தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

யார் அந்த முட்டாள்? - ட்விட்டர் சிஇஓ குறித்து எலான் மஸ்க் ட்வீட் - foolish CEO

ட்விட்டர் சிஇஓ பதவி ராஜினாமா தொடர்பாக எலான் மஸ்க் புதிய ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

யார் அந்த முட்டாள்? - எலான் மஸ்க் ட்வீட்
யார் அந்த முட்டாள்? - எலான் மஸ்க் ட்வீட்

By

Published : Dec 21, 2022, 10:57 AM IST

சான் பிரான்சிஸ்கோ:டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலரும், ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவுமான எலான் மஸ்க், கடந்த டிச.18ஆம் தேதி ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். அதில், தான் ட்விட்டர் சிஇஓ பதவியில் நீடிக்கலாமா என்பது குறித்த கேள்விக்கு புளூ டிக் ட்விட்டர் பயனர்கள் மட்டும் வாக்களிக்குமாறு கூறினார்.

இந்த வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர், எலான் மஸ்க் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலக வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று (டிச.21) எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ட்விட்டர் சிஇஓ பதவியை வகிப்பதற்கு தகுதி வாய்ந்த முட்டாள்தனம் உள்ள ஒருவர் கிடைத்துவிட்டால், நான் சிஇஓ பதவியை ராஜினாமா செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:எலான் மஸ்க் சொந்த வாக்கெடுப்பில் - இத்தனை பேருக்கு விருப்பமா?

ABOUT THE AUTHOR

...view details