தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சவூதி அரேபியாவில் தேர்வு அறைகளில் பெண்களுக்கு ஹிஜாப் அணிய தடை ஏன்?

சவூதி அரேபியாவில் தேர்வு அறைகளில் பெண்களுக்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து காணலாம்.

ஹிஜாப் அணிய தடை செய்தது ஏன்
ஹிஜாப் அணிய தடை செய்தது ஏன்

By

Published : Dec 22, 2022, 12:38 PM IST

சவூதி அரேபியாவில் தேர்வு அறைகளில் பெண்களுக்கு ஹிஜாப் அணிய தடை செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய கல்வி மற்றும் பயிற்சி மதிப்பீட்டு ஆணையம் (ETEC) தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. அதில், தேர்வு நடைபெறும் இடங்களில் பொது கண்ணியத்தைப் பாதுகாக்கும் விதிமுறைகளுக்கு இணங்க ஹிஜாப் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதை கடைப்பிடிப்பது அவசியம் என கூறியுள்ளது.

சவூதி அரேபியாவில் ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்களின் அடையாளமாக கருதப்படுகிறது. ஷரியத் சட்ட விளக்கத்தை அடிப்படையாக கொண்ட சவுதி சட்டத்தின்படி, பெண்கள் பொது இடங்களில் செல்லும்போது ஹிஜாப் அணிய வேண்டும்.

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான ஹிஜாப் விதியை நீக்கினார். இந்நிலையில், தேர்வு அறைகளில் ஹிஜாப் அனுமதிக்கப்படுமா என சவூதி மாணவி டாலியா என்பவர் கேட்ட கேள்விக்கு, சவூதி அரேபிய கல்வி மற்றும் பயிற்சி மதிப்பீட்டு ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது.

அதில், தேர்வு அறைகளில் பொது கண்ணியத்தை பாதுகாக்கும் விதிமுறைகளுக்கு இணங்கக்கூடிய ஆடைகளை கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு இணங்க ஹிஜாப் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. அதை கடைப்பிடிப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒருமித்த உறவுக்கான வயதை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details