தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டிகாப்ரியோ ஏன் இளம் பெண்களுடன் மட்டும் டேட்டிங் செய்கிறார்? - சக நடிகை சொன்ன ரகசியம் - நடிகை மிரியம் மார்கோலிஸ்

நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ இளம் பெண்கள் மீது அதிக விருப்பம் கொண்டவர். இவர், 25 வயதிற்கு மேற்பட்ட யாருடனும் டேட்டிங் செய்யவில்லை; அதற்கான காரணத்தை அவரது சக நடிகை மிரியம் மார்கோலிஸ் வெளிப்படுத்தினார்.

லியோனார்டோ டிகாப்ரியோ ஏன் இளம் பெண்களுடன் மட்டும் டேட்டிங் செய்கிறார்?
லியோனார்டோ டிகாப்ரியோ ஏன் இளம் பெண்களுடன் மட்டும் டேட்டிங் செய்கிறார்?

By

Published : Dec 20, 2022, 3:40 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்:பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய நடிகை மிரியம் மார்கோலிஸ், ஹாலிவுட் நட்சத்திரம் லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு இளம் பெண்கள் மீதான நாட்டம் குறித்துப் பேசியுள்ளார். தற்போது, டிகாப்ரியோ, அவரை விட 21 வயது இளைய சூப்பர்மாடல் ஜிகி ஹடிட் உடன் இணைந்துள்ளார்.

தனது சக நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ பற்றி நடிகை மிரியம் மார்கோலிஸ் கூறுகையில், 48 வயதான டிகாப்ரியோ தந்தையாக விரும்பாததால் வயதான பெண்களைத் தவிர்க்கிறார் என்று கூறினார்.

இதற்கிடையில், மிரியம் தனது முன்னாள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வகுப்புத் தோழரான ஜான் க்ளீஸ் குறித்து விமர்சித்தார். அவர் ஒரு "கெட்ட மனிதர்", மேலும் வரவிருக்கும் அவரது ஜிபி நியூஸ் நிகழ்ச்சியில் தான் ஒருபோதும் தோன்றமாட்டேன் என்று கூறினார். "நான் ஒருபோதும் இருவர் நடத்தும் நிகழ்ச்சியில் தோன்றமாட்டேன். குறிப்பாக, ஜான் கிளீஸ் மற்றும் பியர்ஸ் மோர்கன் நடத்தும் நிகழ்ச்சியில் ஒருபோதும் தோன்ற மாட்டேன்" என சண்டே டைம்ஸ் கல்ச்சர் இதழில் கூறியுள்ளார்.

மேலும் நடிகை மிரியம், ஹாரி பாட்டர் நடிகர் சார்லஸ் பற்றி கூறுகையில், ’நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். இருப்பினும், மிரியம் சார்லஸ் ஒரு நற்பெயரை பெறும் அளவுக்கு "நல்லவர்" என்று நினைக்கவில்லை’ எனக் கூறினார்

நடிகை மிரியம் மார்கோலிஸ் மக்கள் தன்னை ஒரு ஷோ-ஆஃப் என்று நினைத்தாலும் கவலை இல்லை. "இது என்னைத் தவிர வேறு யாரையும் காயப்படுத்தாது. எனது நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் மக்கள் அதை வெளிப்படுத்துவார்கள். இதுவரை, பெரும்பாலான மக்கள் அதைச் செய்யவில்லை’’ என்றார்.

இதையும் படிங்க: எலான் மஸ்க் சொந்த வாக்கெடுப்பில் - இத்தனை பேருக்கு விருப்பமா?

ABOUT THE AUTHOR

...view details