தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வாஷிங்டனில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு... பொதுமக்கள் இருவர் பலி... - வீதியில் துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன் நகரில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

DC
DC

By

Published : Aug 25, 2022, 2:14 PM IST

வாஷிங்டன்:அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், நார்த் கேபிடல் என்ற தெருவில் திடீரென மர்மநபர்கள் சிலர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்த தெருவில் உள்ள கட்டடத்தின் முன்பு காரில் வந்து நின்ற இருவர், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் என்றும், இந்த சம்பவத்தில் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இறந்த உடலுக்கு சடங்குகள்...வியக்க வைக்கும் விநோத பழக்கம்

ABOUT THE AUTHOR

...view details