தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மாஸ்கோ நோக்கி முன்னேற்றம்! வாக்னர் படை மீது ரஷ்ய ஹெலிகாப்டர்கள் தாக்குதல்! - மாஸ்கோவை நெருங்கும் வாக்னர் குழு

மாஸ்கோவை நோக்கி வாக்னர் குழு முன்னேறி வருவதாக கூறப்படும் நிலையில் அவர்கள் மீது ரஷ்ய ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் மீது ரஷ்யா பாதுகாப்பு அமைப்புகள் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

Wagner
Wagner

By

Published : Jun 24, 2023, 6:05 PM IST

மாஸ்கோ :ரஷ்யாவின் ராணுவ தலைமையகமான ரோஸ்டோவை முற்றிலும் கைப்பற்றிவிட்டதாக வாக்னர் கூலிப்படை அமைப்பின் தலைவர் எவ்ஜின் பிரிகோஜின் தெரிவித்து உள்ள நிலையில் மாஸ்கோவை நோக்கி முன்னேறி வரும் கூலிப்படை வீரர்கள் மீது ரஷ்ய ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ராணுவத்திற்கு ஆதரவாக களமிறங்கி போரிட்டு வந்த வாக்னர் குழு தற்போது சொந்த நாட்டுக்கு எதிராகவே திரும்பி உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் சுற்றி உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யா ராணுவத்திற்கு உதவியதாக வாக்னர் குழுவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இதனால் வாக்னர் குழுவை ரஷ்ய ராணுவம் கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், வாக்னர் குழு மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படும் நிலையில் 25 ஆயிரம் வீரர்களை கொண்ட வாக்னர் குழுவில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இது உள்பட பல்வேறு காரணங்களால் ரஷ்யாவின் ராணுவத்திற்கு எதிராக வாக்னர் குழு திரும்பி உள்ளது.

இதனிடையே தன் டெலிகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின், ரஷ்யாவில் ராணுவ தலைமையை கவிழ்க்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். உக்ரைனில் இருந்து வெளியேறிய வாக்னர் குழு தலைநகர் மாஸ்கோவுக்கு தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டோ நகரை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது.

ரோஸ்டோவில் உள்ள ரஷ்ய ராணுவத்தின் தலைமையகத்தை கைப்பற்றி விட்டதாக வாக்னர் குழு தெரிவித்து உள்ளது. வாக்னர் குழு முன்னோக்கி வருவதை அடுத்து மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், " நாட்டின் ராணுவ உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், உள்நாட்டு கிளர்ச்சியை தூண்டும் அனைவரும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.

மேலும் சொந்த நாட்டுக்கு எதிராக வாக்னர் குழு திரும்பி இருப்பது முதுகில் குத்தும் செயல் என்றும் ஆயுதப் படைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கும் தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தலைநகரில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோஸ்டோவில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடுமையான சூழலில் ரஷ்ய மக்கள், ராணுவம், சட்ட அமைப்புகள் அனைத்தும் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒட்டுமொத்த தலைநகரும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. மாஸ்கோ நோக்கி முன்னேறிய வாக்னர் படையை ரஷ்ய ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details