தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 25, 2022, 1:35 PM IST

ETV Bharat / international

ஜப்பானில் எரிமலை வெடிப்பு... 2 நகர மக்கள் வெளியேற்றம்...

ஜப்பானில் உள்ள சகுராஜிமா எரிமலை திடீரென வெடிக்க தொடங்கியதால் இரண்டு நகரங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

volcanic-eruption-in-japan-forces-evacuations-in-2-towns
volcanic-eruption-in-japan-forces-evacuations-in-2-towns

டோக்கியோ: ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள கியூஷு தீவில் சகுராஜிமா எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை நேற்றிரவு (ஜூலை 24) திடீரென வெடிக்க தொடங்கியது. இதன் காரணமாக எரிமலையிலிருந்து 2.5 கி.மீ. வரையில் தீப்பாறைகள் பறந்து விழுந்துவருகின்றன. அதோடு நகரங்களை மறைக்கும் அளவிலான கரும்புகைகள் சூழ்ந்துள்ளன.

இதனிடையே ஜப்பானின் புவியியல் ஆய்வு மையம் அருகிலுள்ள நகரங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையின்படி ககோஷிமாவின் இரண்டு நகரங்களில் உள்ள மக்கள் விரைவாக வெளியேறும்படி அரசு அறிவுறுத்தியது. அந்த வகையில், சுமார் 51 வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேறினர்.

அதோடு எரிமலையிலிருந்து 3 கி.மீட்டருக்கு தொலைவில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சகுராஜிமா எரிமலை உயிருடன் இருக்கும் எரிமலைகளில் மிக முக்கியமானதாகும். இதுவரை மூன்று முறை வெடித்துள்ளது. முதலாவதாக 1914ஆம் ஆண்டு வெடித்தபோது 58 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ... அவசர நிலை அறிவிப்பு...

ABOUT THE AUTHOR

...view details