லண்டன்:நாய்கள் கடிகளிலிருந்து தப்பிக்கும் வழிமுறையைக் கற்பிக்க மெய்நிகர் நாய் (Virtual dog) ஒன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டேவ் (DAVE: Dog Assisted Virtual Environment) எனும் இந்த மெய்நிகர் லாப்ரடர் நாயை லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாலர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம், மனிதர்கள் எப்படி நாய்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதென்று தெரிந்துகொள்ளமுடியும்.
ஓர் ஆய்வில், லண்டனில் 1998 முதல் 2018 வரை நாய்கள் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மனிதன் - நாய் இடையேயான பழக்கவழக்க பரிமாற்றங்களை தெரிந்துகொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்கு உண்மையான நாயை பயன்படுத்துவது சற்று சாத்தியமில்லாததால், இந்த மெய்நிகர் நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லிவர்பூல்ம் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கார்ரி வெஸ்ட்கர்த் கூறுகையில், “நாய் கடி சம்பவங்கள் மனிதனுக்கும் நாய்க்கும் இடையேயான பிணைப்பை பாதித்து வருகிறது. இதனை மாற்ற அனைவரும் நாய்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மனிதன் நாய்களுடன் பழக வேண்டும். ஆனால் உயிருள்ள நாய்களைப் பயன்படுத்துவது கடினம். அதனாலேயே மெய்நிகர் நாயைக் கண்டுபிடித்துள்ளோம்.