வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டுள்ளன. மறுப்புறம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கலிபோர்னியா சென்றிருந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று (ஏப்.26) வாஷிங்டன் திரும்பினார்.
அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்று உறுதியானதையடுத்து கமலா ஹாரிஸ் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அங்கிருந்தே அரசுப் பணிகளை மேற்கொள்வார்.