சிகாகோ:அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோவில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில் சுதந்திர தின அணிவகுப்பு நேற்று (ஜூலை 4) தொடங்கியது. இந்த அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடத்தில் 22 வயது மதிக்கத் தக்க இளைஞன் ஒருவர் கூட்டத்தை பார்த்து சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். இதனால் சம்பவயிடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பியோட முயற்சித்த இளைஞனை சிகாகோ போலீசார் விரட்டி பிடித்தனர்.
சுதந்திர தின அணிவகுப்பில் திடீர் துப்பாக்கிச்சூடு - 6 பேர் உயிரிழப்பு - 24 wounded in shooting at Chicago area July 4 parade
அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த துப்பாக்கிச்சூடு நடந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
முதல்கட்ட தகவலில் கைது செய்யப்பட்டது ராபர்ட் இ கிரிமோ என்பது தெரிய வந்தது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள பள்ளிகள், தேவாலாயங்கள், வணிக வளாகங்கள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது அதிகரித்துவருகிறது. குறிப்பாக, குழந்தைகள், பெண்கள் அதிகளவில் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். இதுகுறித்து அதிபர் பைடன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
இதையும் படிங்க:டென்மார்க் ஷாப்பிங் காம்ப்ளக்சில் துப்பாக்கிச் சூடு... 3 பேர் உயிரிழப்பு...