இதுகுறித்து அமெரிக்க கருவூலத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் அணுசக்தித் திட்டம், சொந்த மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள், டிரோன்கள் மற்றும் இராணுவப் பயிற்சியுடன் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போருக்கு ஆதரவு அளித்தது போன்ற ஈரானின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவிக்கிறது.
ஈரானிய பெட்ரோ கெமிக்கல்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களை இடைத்தரகர்கள் மூலம் வாங்கும் சர்வதேச பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக ஈரானின் ட்ரிலயன்ஸ் (Triliance) அமைப்பு முக்கிய தரகராக செயல்படுகிறது.
இது மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஈரானிய பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. இதில் இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான டிபாலாஜி பெட்ரோகெம் பிரைவட் லிமிடெட் (Tibalaji Petrochem Private Limited), ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் சீனா உள்ளிட்ட சில நெட்வொர்க், இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறது.
இதற்கு ஈரானிய ஏற்றுமதி நிறுவனங்களான Triliance Petrochemical Co. Ltd. (Triliance) மற்றும் Persian Gulf Petrochemical Industry Commercial Co. (PGPICC) ஆகியவை பக்க பலமாக செயல்படுகிறது. எனவே இதன் மீதான நெட்வொர்க் நிறுவனங்களின் தடை அமெரிக்காவில் தொடரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இன்னும் வேகம் வேண்டும்.. நுகர்வோர் பயன்பாட்டில் வளர்ச்சி அடைந்த சீனா