தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க அதிபர் பைடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்.. இதுதான் காரணமா? - அதிபர் பைடன் ஐரோப்பியா பயணம்

4 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து, லிதுவேனியா, பின்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ், பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரை பைடன் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Joe Biden
Joe Biden

By

Published : Jul 8, 2023, 10:38 PM IST

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் பைடன் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக 3 ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் இடையே இங்கிலாந்து செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து அரர் மூன்றாம் சார்லஸ் மற்றும் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், 4 நாடகள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிபர் பைடன், 3 நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலாக இங்கிலாந்து செல்லும் அதிபர் பைடன், அரசர் மூன்றாம் சார்லசை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரிட்டன் அரசராக மூன்றாம் சார்லஸ் மூடிசூட்டப்பட்ட பின் முதல் முறையாக அதிபர் பைடன், அவரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை, அதிபர் பைடன் சந்தித்து இரு நாடுகள் நட்புறவு மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

தொடந்து இங்கிலாந்தில் இருந்து லிதுவேனியா தலைநகர் வில்னியஸ் செல்லும் அமெரிக்க அதிபர் பைடன், நேட்டோ பாதுகாப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் கலந்து கொள்ள உள்ள நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டு உள்ள நாடுகளை ஒன்றிணைப்பது தொடர்பாகவும், உக்ரைன் - ரஷ்யாவின் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட திட்டங்களை மறுமதிப்பீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

கடைசியாக பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கிக்கு அதிபர் பைடன் செல்ல உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அண்மையில் ரஷ்யாவின் எதிர்பை மீறி நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்ததை கொண்டாடும் விருந்தில் அதிபர் பைடன் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இந்த பயணம் உலக அரங்கில் அதிபர் பைடனின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க :சிவசேனா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்... விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details