வாஷிங்டன் : அமெரிக்காவில் அண்டை நகரத்திற்கு செல்ல இருந்த உள்நாட்டு பயணி தவறுதலாக வேறு விமானத்தில் ஏறி கரீபியன் தீவு நாடான ஜமைக்காவிற்கு பாஸ்போர்ட் கூட இல்லாமல் சென்ற விநோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கவின் நியூ ஜெர்சி நகரை சேர்ந்த பெண் எல்லிஸ் ஹெப்ராட்.
பென்னிசில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலாடேல்பியாவில் இருந்து புளோரிடாவில் உள்ள ஜாக்சன்வில்லே நகருக்கு அடிக்கடி பயணம் செய்வதை இவர் வழக்கமாக கொண்டு உள்ளார். ஏறத்தாழ பிலாடேலிபியாவையும், ஜாக்சன்வில்லேவையும் தனது வீட்டின் முன் வாசல் மற்றும் பின்வாசல் என்பது போல் கொண்டு வந்து உள்ளார்.
சம்பவத்தன்று எல்லிஸ் ஹெப்ராட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக ஜாக்சன்வில்லே நகருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். அதற்காக விமான நிலையமும் எல்லிஸ் வந்து இருக்கிறார். வழக்கமாக பயணிக்கும் விமானத்திற்காக காத்திருந்த எல்லிஸ் கழிவறை சென்று திரும்பி உள்ளார். ஆப்போது அவர் செல்லும் நுழைவுப்பகுதி மாற்றப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
எல்லிஸ் ஹெப்ராட் கடைசி நேரத்தில் வந்ததாலும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த விமானத்தில் பயணிகள் கிட்டத்தட்ட ஏறி முடிந்து கிளம்புவதற்கான நடைமுறைகளை செய்ய தயாரானதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவசர அவசரமாக எல்லிஸ் பெயரையும் மட்டும் உறுதிபடுத்தி விட்டு அங்கு இருந்த ஊழியரும் எல்லிஸ் ஹெப்ராட் விமானத்தில் பயணிக்க அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது.