ஹொனலுலு : ஹாவாய் தீவின் கேனோஹே பே பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் கடற்படை தளம் உள்ளது. இந்த ராணுவ தளத்தில் P-8A aircraft உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன. கேனோஹே கடற்படை தளத்தில் P-8A aircraft என்ற விமானம் உளவு மற்றும் ரகசிய தகவல்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
உளவு பார்ப்பது தவிர்த்து P-8A aircraft விமானத்தை நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சாதனங்களை வேட்டையாடுவதற்காகவும் அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 9 பயணிகளுடன் பறந்து கொண்டு இருந்த விமானம் தரையிறங்க முயற்சித்த போது, கடற்படை தளத்தின் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.