தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்திய துணை தூதரகம் தாக்குதல் - குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை!

கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி, காலிஸ்தான் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை சேதப்படுத்தி இருந்த நிலையில், ஜூலை 2ஆம் தேதி, மீண்டும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு உள்ளது.

US lawmakers, Indian-Americans condemn attack on Indian consulate in San Francisco
இந்திய துணை தூதரகம் தாக்குதல் - குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்க எம்.பிக்கள் கோரிக்கை!

By

Published : Jul 7, 2023, 3:45 PM IST

வாஷிங்டன்:அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் மீது தீ வைப்பு சம்பவத்திற்கு அமெரிக்க சட்ட வல்லுநர்கள் மற்றும் செல்வாக்குமிக்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து, இந்த நடவடிக்கையை, இந்தியாவுக்கு எதிரான "வன்முறை சொல்லாட்சியை" வர்ணித்து, கடுமையாகச் சாடி உள்ளார், மேலும் பேச்சு சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டுவதற்கு அல்லது சொத்துக்களை சேதப்படுத்துவதற்கான உரிமையை குறிக்காது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஜூலை 2 தேதியிட்ட வீடியோவில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தீ வைப்பு சம்பவம் நடைபெறுவது காட்ட்ப்படுகிறது. "வன்முறை வன்முறையை தூண்டுகிறது" என்ற வாசகத்துடன் கூடிய இந்த வீடியோவில், கனடாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் காலிஸ்தான் புலிப்படை (KTF) தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணம் தொடர்பான செய்திக் கட்டுரைகளும் இடம்பெற்று உள்ளன.

தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராக திகழும் நிஜ்ஜாரை, உயிருடன் பிடித்து தருபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதம் கனடாவில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே, நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான காங்கிரஸின் ரோ கன்னா மற்றும் மைக்கேல் வால்ட்ஸ், இந்தியர்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜுலை 6ஆம் தேதி வெளியிட்டு உள்ள கூட்டறிக்கையில், தூதரக வசதிகளுக்கு எதிரான வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு உள்ளனர்.

"இந்திய காங்கிரஸின் இணைத் தலைவர்கள் என்ற முறையில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தீவைப்பு மற்றும் நாசவேலை முயற்சிகள் மற்றும் தூதர் சந்து உட்பட இந்திய தூதர்களை குறிவைத்து வன்முறை வாசகங்களுடன் சமூக ஊடகங்களில் சுவரொட்டிகள் பரப்பப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

"ஒவ்வொரு அமெரிக்கருக்கும் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் அது சொத்துகளை அழிக்கவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ உரிமையாக யாரும் கருத இயலாது. தூதரக வசதிகளுக்கு எதிரான வன்முறை ஒரு கிரிமினல் குற்றம் ஆகும். இதனை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. சட்ட அமலாக்கத் துறையினர், இந்திய துணைத் தூதரகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரைவாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரையன் ஃபிட்ஸ்பேட்ரிக் கூறியதாவது, இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. "இந்தியத் துணைத் தூதரகத்தின் மீது மீண்டும் மீண்டும் வெறுப்பூட்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதை நான் உறுதியாகக் கண்டிக்கிறேன், மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பதாக," என்று அவர் தெரிவித்து உள்ளார். இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வியாழக்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளதாவது, "அமெரிக்காவில் வசிக்கும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் இராஜதந்திர வசதிகள் அல்லது பணியாளர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி அல்லது வன்முறைச் செயல்களை கடுமையாகக் கண்டிப்பதாக" தெரிவித்து உள்ளார்.

கடந்த சில மாதங்களில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் காலிஸ்தானி ஆதரவாளர்களால் இரண்டாவது முறையாக குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி, காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் குழுவினர், தூதரகத்தைத் தாக்கி சேதப்படுத்தினர். காலிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், காவல்துறையால் எழுப்பப்பட்ட தற்காலிக பாதுகாப்பு தடைகளை உடைத்து, தூதரக வளாகத்திற்குள் காலிஸ்தானி கொடிகளை ஏற்றினர். பின்னர், தூதரகப் பணியாளர்கள் விரைவில் இந்தக் கொடிகளை அகற்றினர்.

காலிஸ்தான் பிரிவினர், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் தன்னைப் புதுப்பிக்க முயற்சிப்பதாக, தெற்காசிய சிறுபான்மையினர் கலெக்டிவ் அமைப்பு வெளியிட்டு உள்ள ட்விட் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சீக்கியத் தலைவர் ஜஸ்தீப் சிங், இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதல் வெட்கக்கேடானது மற்றும் அவமானகரமானது என்று குறிப்பிட்டு உள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஜஸ்தீப் சிங் கூறியதாவது, "இந்திய துணை தூதரகம் மீதான தாக்குத்லை யார் செய்து இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். எந்தவொரு தூதரகத்தையும் அல்லது எந்த தூதர் அல்லது யாரையும் குறிவைப்பது நல்ல விஷயம் அல்ல," குற்றவாளிகள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்றாலும், அது காலிஸ்தானி இயக்கத்துடன் இணைக்கப்பட்டதால், சீக்கிய சமூகம், வருத்தம் அடைவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

"பேச்சு சுதந்திரம் மற்றும் போராட்டம் நடத்தும் உரிமைக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் இடையே ஒரு எல்லை உள்ளது. எனவே, இந்த குற்றச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Rahul Gandhi: ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு மீதான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details