அமெரிக்கா:கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கரோனா தொற்று உலக நாடுகளுக்குப் பரவியது. பல கோடி மக்களைக் கொன்று குவித்த இந்த தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்றுவரை முழுமையாக மீளவில்லை என்றே கூறலாம். குறிப்பாக இந்த தொற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளும், வளரும் நாடுகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த கரோனா தொற்றை பயோ வார் தொடுக்கும் நோக்கில் சீனா உருவாக்கியதாக அமெரிக்கா பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்தது.
ஆனால், இதற்கு சீனா மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து இது குறித்து அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட நான்கு குழுக்கள் தொடர்ந்து ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு வந்தன.
இந்நிலையில் அந்த உளவுத்துறையின் ஒரு குழு தற்போது தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கரோனா தொற்றை சீனா வேண்டுமென்றே பரப்பியது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு முரணான தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
மேலும் அதற்கான சாத்தியக்கூறுகள் ஒன்றும் தென்படவில்லை எனத் தெரிவித்துள்ள அந்த உளவுத்துறை, இந்த தொற்று விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளிட்டவற்றில் இருந்து மனிதர்களுக்குப் பரவி இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் மற்ற இரண்டு ஆய்வாளர்கள் குழு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் வைத்து மரபணு ரீதியாக வைரஸ்களை உருவாக்கி உலக நாடுகளுக்குப் பரவசெய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
மற்றொரு புலனாய்வுக்குழு தற்போது வரை, எந்த ஒரு தகவலை வழங்காமல் அமைதி காத்து வருகிறது. இப்படி சீனா தான் கரோனா தொற்றை பரப்பியது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு அந்நாட்டிலேயே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில் உண்மை என்னவென கண்டுபிடிக்கும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் விடாப்பிடியாக இருந்து வருகிறது.
ஆனால், சீன அரசுக்குச் சொந்தமான ஆய்வகத்தில் இருந்தே கரோனா தொற்று தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவின் மற்றொரு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், கரோனா தொற்றுநோயின் தோற்றம் பெரும்பாலும் ஆய்வகத்தில் நிகழ்ந்தது போன்றே இருக்கிறது என தங்கள் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுவதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு இடையில்தான் மற்றொரு புலனாய்வுக் குழுவின் ஆய்வு அறிக்கை நேர் முரணாக சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கரோனா பரவவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:Sundar Pichai: குஜராத்தில் கூகுளின் குளோபல் ஃபின்டெக் மையம் - சுந்தர் பிச்சை முக்கிய அறிவிப்பு!