வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு கலிபோர்னியா நீதிமன்றம் அபராதம் விதித்தது. ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கி அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் திக்குமுக்காடி வருகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிரம்ப் தரப்பில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, அபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் வணிகை பதிவில் முறைகேடு செய்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான விசாரணை நடைபெற்ற அதேநேரத்தில், கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஸ்டார்மி டேனியல்ஸ் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
கலிபோர்னியா நீதிமன்றம் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. டொனால்ட் டிரம்புக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு இதேபோல் டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஸ்டார்மி டேனியல்ஸ் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அந்த வழக்கில் ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம் அதற்கு 2 லட்சத்து 45 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு அபராதமாக விதித்து தீர்ப்பு வழங்கியது.