தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வான் சாகசத்தில் விபரீதம் - விண்ணில் வெடித்து சிதறிய போர் விமானங்கள்! - வைரல் வீடியோ

அமெரிக்காவில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இரு போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கீழே விழுந்து வெடித்து சிதறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெக்சாஸ்
டெக்சாஸ்

By

Published : Nov 13, 2022, 12:51 PM IST

அமெரிக்கா:அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டலாஸ் நகரில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானங்களின் சாகசம் நடைபெற்றது. கண்களைக் கவரும் வகையில் வானில் பறந்த போர் விமானங்கள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டன.

சாகசத்தில் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராகப்பயன்படுத்தப்பட்ட பெரிய ரக போயிங் B-17 குண்டு வீசும் விமானமும், சிறிய ரக பில் P-63 கிங் கோப்ரா விமானமும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

வானில் கட்டுப்பாட்டை இழந்த பில் P-63 கிங் கோப்ரா, பக்கவாட்டில் பறந்து கொண்டிருந்த போயிங் விமானம் மீது மோதியது. இரண்டு துண்டுகளாக உடைந்த விமானங்கள் மண்ணில் விழுந்த வேகத்தில் வெடித்துச்சிதறின. இந்த கோர விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது.

வான் சாகசத்தில் விபரீதம்

விபத்தில் ஏறத்தாழ 6 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், மீட்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். வானில் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளி முதல்வர் கைது..!

ABOUT THE AUTHOR

...view details