லூயிஸ்டன் (அமெரிக்கா): அமெரிக்காவின் மெயின் மாகாணாத்தில் உள்ள லூயிஸ்டன் நகரத்தில் உள்ள ஒரு பாரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.
இதனையடுத்து, நகர வீதிகளில் உள்ள பொதுமக்கள், தொழிலதிபர்கள் அனைவரும் குடியிருப்புக்கு உள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும், இது தொடர்பான விசாரணை குறித்து பொது வெளியில் தற்போதைக்கு தெரிவிக்க இயலாது எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், லூயிஸ்டன் காவல் துறையினர், தங்களது முகநூல் பக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். மேலும், மருத்துவ உதவிகளைத் தவிர, வேறு எதற்காகவும் யாரும் வெளியேற வேண்டாம் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.