தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐ.நா. கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கம்? - ஐநா

ஐ.நா. கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஓட்டெடுப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

UN
UN

By

Published : Apr 7, 2022, 10:29 AM IST

நியூயார்க்: ஐநாவின் முதன்மை மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்குவது குறித்து ஐநா பொதுச் சபை இன்று (ஏப்.7) வாக்கெடுப்பு நடத்தவுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் வெளியேறிய பின்னர், நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக அமெரிக்காவால் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் கவுன்சிலில் ரஷ்யாவின் இடம் பறிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புட்சா நகரில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான காணொலிகள் வெளியாகி உலகளவில் மக்களை உலுக்கின. இந்த நிலையில், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், “உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கடுமையாக நடந்துவருகிறது.

ரஷ்ய ராணுவ வீரர்கள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதெற்கெல்லாம் ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும். மனித உரிமைகள் அமைப்பில் ரஷ்யாவும் இருப்பது ஜனநாயக கேலித்கூத்து” என்றார்.

இதையும் படிங்க : கிவ் நகருக்கு அருகே 410 உடல்கள் மீட்பு : பொதுமக்களை ரஷ்ய ராணுவம் சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details