டெர்னா (லிபியா):லிபியா வெள்ளத்தில் இறப்பு எண்ணிக்கை குறித்து முன்னதாக அளிக்கப்பட்ட தகவலை ஐக்கிய நாடுகள் சபை திருத்தம் செய்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் (OCHA) முன்னதாக தெரிவித்த 11,300 என்ற எண்ணிக்கைக்குப் பதிலாக குறைந்தது 3,958 என கூறியுள்ளது.
சமீபத்திய தகவளின்படி, 9000 பேர் இன்னும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், லிபிய செஞ்சிலுவைச் சங்கத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி கடந்த சனிக்கிழமை அளித்த தகவளின்படி OCHA, அதன் முந்தைய தகவளில் டெர்னாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 11,300 பேர் இறந்ததாக கூறியது.
ஐ.நா பொதுச்செயலாளரின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் பேசுகையில், "நாங்கள் WHO ஆல் சரிபார்க்கப்பட்ட தகவளின்படியே எண்ணிக்கையை முடிவுசெய்தோம்" என கூறினார். ஆனால், டெர்னாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் அதிகமான இறப்பு எண்ணிக்கையை தான் ஐ.நா., வுக்கு அளிக்கவில்லை என லிபிய ரெட் கிரசண்ட் சொசைட்டி முன்னதாகவே தெரிவித்துள்ளது.
மேலும், ஐ.நா., ஏன் இறப்பு எண்ணிக்கையை தவராக மேற்கோள் காட்டியது என்ற கேள்விக்கு ஹக், "பல துயரங்களுக்கு மத்தியில் நாங்கள் எண்ணிக்கைகளை திருத்தம் செய்கிறோம், அதுதான் இங்கு நடந்தது. நாங்கள் எண்ணிக்கையை சரிபார்க்க பல தரப்புடன் குறுக்கு சோதனை செய்வோம். நாங்கள் இத்தகைய திருத்தங்கள் செய்வதற்கு காரணம் நாங்கள் குறுக்கு சோதனை செய்வதனால் தான். இறப்பு எண்ணிக்கை நிலையாக இருக்காது, கூடவோ குறையவோ செய்யலாம்" என தெரிவித்தார்.