கீவ் (உக்ரைன்): உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியுள்ளார், ஆனால் அவர் பலத்த காயம் அடையவில்லை என்று ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் Serhii Nykyforov, பேஸ்புக் பதிவில், பதிவிட்டிருந்ததாக உக்ரைனிய ஊடக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்திற்குப் பிறகு மருத்துவர்கள் ஜெலென்ஸ்கியை பரிசோதித்தனர். அவர் பலத்த காயம் அடையவில்லை என்று தெரியவந்தது. பின் மருத்துவர்கள் ஜெலென்ஸ்கியுடன் வந்த அவரது டிரைவருக்கு மருத்துவ உதவி அளித்து ஆம்புலன்சுக்கு மாற்றினர். விபத்து குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்துவார்கள் என்று செய்தி தொடர்பாளர் கூறினார்.
ரஷ்யாவால் ஆறு மாத காலமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த Izium நகரை உக்ரைன் படைகள் கடந்த சனிக்கிழமை மீண்டும் கைப்பற்றின. உக்ரைன் படைகள் Izium நகரை கைப்பற்றியதைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் பின்வாங்க துவங்கியுள்ளது.