லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வடக்கு பிரிட்டன் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது காரில் அமர்ந்தபடி பேசிக்கொண்டு சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் பிரதமர் ரிஷி சுனக் சீட் பெல்ட் அணியாமல் இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், ரிஷி சுனக்கிற்கு எதிராக பலரும் கண்டன குரல் எழுப்பத் தொடங்கினர். இதே செயலை பொதுமக்கள் யாராவது செய்திருந்தால் காவல்துறை என்ன செய்திருக்கும்? என்று டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான் சீட் பெல்ட் விவகாரத்தில் பிரதமர் அபராதம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்தது.