தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நன்மடோல் புயல்: ஜப்பானில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - Japan wipes

ஜப்பானில் நன்மடோல் புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய போக்குவரத்து சேவைகள் முடங்கின.

ஜப்பானில் தாண்டவம் ஆடிய நன்மடோல் புயல் - பல்வேறு சேவைகள் பாதிப்பு
ஜப்பானில் தாண்டவம் ஆடிய நன்மடோல் புயல் - பல்வேறு சேவைகள் பாதிப்பு

By

Published : Sep 19, 2022, 11:23 AM IST

டோக்கியோ:ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெப்பமண்டல சுழற்சியால் உருவான நன்மடோல் புயல் நகரின் பல்வேறு இடங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூஷூ பகுதியில் நேற்று 108 கிலோமீட்டர் முதல் 162 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் கரையை கடந்தது. இதனால் ககோஷிமா மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் நகரங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதனிடையே கனமழை பெய்துவருவதால் சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது. புல்லட் ரயில்கள், விமான சேவைகள், சாலை போக்குவரத்து மூடக்கப்பட்டுள்ளன. இந்த நன்மடோல் புயல், நாளை டோக்கியோவை கடந்து வடகிழக்கு ஜப்பானை அடையும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தைவானில் 2ஆவது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ABOUT THE AUTHOR

...view details