மத்திய காஷ்மீர்:புட்காம் மாவட்டம் , மக்ரேபோரா பகுதியில் தீவிரவாதிகள் புலம்பெயர் தொழிலாளர்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொரு நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாக்குதல் நடந்த உடனேயே, தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் அட்டூழியம்! இருவர் மீது துப்பாக்கிச் சூடு - காஷ்மீர்
காஷ்மீரில் , புட்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
தீவிரவாதி
நேற்று குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் பாதுகாப்பு அச்சுறுத்துல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர்; இராணுவ வீரர்கள் மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல்?