தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்விட்டரில் புதிய பயனர்களுக்கு கெடுபிடி: ப்ளூ டிக் குறித்த முக்கிய அப்டேட் - ட்விட்டரில் மீண்டும் ப்ளூ டிக் சேவை

ட்விட்டரில் முக்கிய பிரபலங்களின் அக்கவுண்ட்களுக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் சேவை நிறுத்தப்பட்டதையடுத்து மீண்டும் வழங்கப்பட உள்ளது.

Etv Bharatட்விட்டரில் மீண்டும்  ப்ளூ டிக் சேவை - புதிய கணக்குகளுக்கு 90 நாட்களுக்கு அனுமதி இல்லை
Etv Bharatட்விட்டரில் மீண்டும் ப்ளூ டிக் சேவை - புதிய கணக்குகளுக்கு 90 நாட்களுக்கு அனுமதி இல்லை

By

Published : Nov 18, 2022, 2:20 PM IST

Updated : Nov 18, 2022, 2:56 PM IST

சான் பிரான்சிஸ்கோ:ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். இந்த வரிசையில் சில தினங்களுக்கு முன் பிரபலங்களின் கணக்கிற்கு வழங்கப்படும் ப்ளூ டிக் சேவையை நிறுத்தினார்.

மேலும் அதற்கு கட்டணம் வசூலிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்ததாக தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் சேவைக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கு தொடங்கிய 90 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இதன் மூலம் மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்பவர்களின் கணக்குகளின் வாய்ப்புகளை குறைக்கும் முயற்சியில் ட்விட்டர் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டர் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘ முன்னதாக வெளியிடப்பட்ட திட்டம் குறித்தும், அதன் காலம் குறித்தும் குறிப்பிடப்படவில்லை. மேலும் நவம்பர் 9 அல்லது அதற்கு பிறகு தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு இந்த ப்ளூ டிக் சேவை வழங்கப்படமாட்டது எனவும், இனி வரும் காலத்தில் தொடங்கப்படும் கணக்குகளுக்கான காத்திருப்பு காலங்களை முன்னறிவிப்பின்றி விருப்பப்படி விதிக்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நவம்பர் 29 முதல் மீண்டும் ப்ளூ டிக் சேவையானது 8 டாலர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று அக்கவுண்ட் சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கவுண்ட்களுக்கு ”ப்ளூ டிக்” சேவை நிறுத்தம்! டிவிட்டர் அதிரடி

Last Updated : Nov 18, 2022, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details