தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கவுண்ட்களுக்கு ”ப்ளூ டிக்” சேவை நிறுத்தம்! டிவிட்டர் அதிரடி - டிவிட்டர்

முக்கிய பிரபலங்களுக்கு வழங்கி வந்த கட்டணமில்லா ப்ளு டிக் அதிகாரப்பூர்வ கணக்கு சேவையை டிவிட்டர் திடீரென நிறுத்தியுள்ளது.

டிவிட்டர்
டிவிட்டர்

By

Published : Nov 10, 2022, 12:38 PM IST

நியூயார்க்:டிவிட்டரை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது முதலே அதில் வருவாயை பெருக்குவதற்கான வேலைகளில் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக இலவசமாக இருந்த அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் சேவையை கட்டணம் செலுத்தி பெறும் வகையில் மாற்றி அமைத்தார்.

ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிப்பதற்குரிய வேலைகளில் டிவிட்டர் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் கட்டணம் வசூலிப்பிற்கான காலக்கெடுவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் இலவசமாக ப்ளூ டிக் சேவை வழங்கப்படும் என டிவிட்டர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சில அமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களில் டிவிட்டர் கணக்கில் ப்ளூ டிக் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், முக்கிய பிரபலங்களுக்கு வழங்கி வந்த ப்ளூ டிக் சேவையை டிவிட்டர் நிறுவனம் தடாலடியாக நிறுத்தி உள்ளது.

ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக ப்ளூ டிக் வழங்கும் சேவையை நிறுத்தி உள்ளதாக டிவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆன்லைன் மோசடி செய்பவர்கள் 8 டாலர்கள் செலுத்தி போலி அதிகாரப்பூர்வ கணக்குகளை உருவாக்கக்கூடும் என்பதால் அதை தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக டிவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கெர்சனில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற உத்தரவு - போரில் திருப்புமுனை!

ABOUT THE AUTHOR

...view details