18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கும் அடல்ட் கன்டெட்டுகளை (Adult contents) அனுமதிக்க ட்விட்டர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பார்ன் வீடியோக்கள், ஆபாச புகைப்படங்கள் உள்ளிட்ட வயதுவந்தோர் பார்க்கும் அடல்ட் கன்டென்டுகளை உருவாக்கும், கன்டென்ட் கிரியேட்டர்களை அனுமதித்து, அதன் மூலம் வருவாய் ஈட்ட ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நடவடிக்கை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த அடல்ட் கன்டெட்டுகள் விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான் என்றும் ட்விட்டர் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பிரபல அடல்ட் கன்டெட் தளமான ஒன்லி பேன்ஸ்-க்கு போட்டியாளராக ட்விட்டர் உருவாகும் எனக் கூறப்படுகிறது.