சான் பிரான்சிஸ்கோ:எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து, அதில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளின் டிக் நிறத்தை அந்நிறுவனம் மாற்றி அமைத்தது. அதன்படி, தனிநபரின் அதிகாரப்பூர்வ கணக்கிற்கு நீலம் (Blue), வணிக கணக்குகளுக்குத் தங்க நிறம் (Gold) மற்றும் அரசு சார்ந்த கணக்குகளுக்குச் சாம்பல் நிற (Gray) டிக்குகளை வழங்கியது.
மேலும் இதற்காக மாதந்தோறும் வசூலிக்கும் சந்தா தொகையும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் ட்விட்டர் புளூவை சமீபத்தில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியது. இதனால் ட்விட்டர் புளூ, இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா உள்பட 15 சர்வதேச நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.