பெய்ஜிங்: சீனாவின் கைஸூ மாகாணத்தில், சந்து சுய் கவுன்டியில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 47 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து, எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
இதில் 27 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமவனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.