சிந்து: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நேற்றிரவு (நவ.17) வேன் ஒன்று பக்தர்களை ஏற்றிக்கொண்டு, செஹ்வான் ஷெரீப்பில் உள்ள புனித சூஃபி ஆலயத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்தது. கைர்பூர் அருகே சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை ஓட்டுநர் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் தடுப்புகளில் மோதி நிலைதடுமாறிய வேன், சாலையோரம் இருந்த நீர் நிரம்பிய குட்டையில் கவிழ்ந்தது. குட்டை ஆழமாக இருந்ததால் வேன் அதில் மூழ்கியது. இந்த விபத்தில், வேனில் இருந்த 12 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.