டெஹ்ரான்: ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க காவல்துறையில் சிறப்பு பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்ட இளம்பெண் மஹ்சா அமினி(22) கோமா நிலைக்கு சென்று, பிறகு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. ஏராளமான பெண்கள் ஹிஜாப்பை எரித்தும் கூந்தலை வெட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.