துருக்கி: தெற்கு துருக்கியின் பசாரிக் மாவட்டத்தில் நேற்று (பிப்.6) காலை 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நாட்டில் உள்ள காஜியாந்தெப், சான்லியுர்பா, தியார்பகிர், அதானா, அதியமான், மலாத்யா, ஒஸ்மானியே, ஹதாய் மற்றும் கிலிஸ் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
அதேபோல் எல்பிஸ்டன் மாவட்டத்தில், நேற்று (பிப்.6) மாலை மீண்டும் 7.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 3,741 கட்டடங்கள் இடிந்து, ஆயிரக்கணக்கானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கினர். உடனடியாக மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணியின் இடையே இதுவரை 1,541 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 9,733 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலநடுக்கம் துருக்கி, சிரியாவின் சில நகரங்கள் மட்டுமின்றி, அண்டை நாடுகளான லெபானிலும் உணரப்பட்டது. சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாட்டின் லட்டகியா, அலெப்போ, ஹமா மற்றும் டார்டஸ் ஆகிய இடங்களில் இருந்த 237 பேர் உயிரிழந்துள்ளனர்.