தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வடக்கு சிரியா மீது துருக்கி வான்வழித் தாக்குதல்

வடக்கு சிரியாவின் சில நகரங்கள் மீது துருக்கி நேற்று (நவ-19) வான் வழித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatவடக்கு சிரியா  மீது துருக்கி வான்வழி தாக்குதல்
Etv Bharatவடக்கு சிரியா மீது துருக்கி வான்வழி தாக்குதல்

By

Published : Nov 20, 2022, 10:32 PM IST

பெய்ரூட்: வடக்கு சிரியாவில் நேற்று (நவ-19) துருக்கிப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்ததாக குர்திஷ் தலைமையிலான படைகள் தெரிவித்துள்ளன. சிரியாவின் வடக்கு பகுதிகளைக் குறிவைத்து 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுக்கு மத்தியில் போர் நடந்து வருகிறது. இப்போரில் பலர் உயிரிழந்தனர்.

இஸ்தான்புல்லின் மையப்பகுதியில் உள்ள பரபரப்பான அவென்யூவில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல்களைத் தொடர்ந்து, துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு போர் விமானத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

துருக்கியின் எல்லைக்கு அருகிலுள்ள சிரியாவின் கோபானி நகரை குறிவைத்து நடந்துள்ளதாக SDF செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹாத் ஷமி அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு, ‘துருக்கி ஏவுகணைகள் சிரியாவின் ராணுவ தளங்களை தாக்கியதாகவும், SDF மற்றும் சிரிய ராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாகவும் அறிவித்தது. அலெப்போ, ரக்கா மற்றும் ஹசாக்கா கிராமப்புறங்களில் உள்ள தளங்களில் துருக்கிய போர் விமானங்களால் சுமார் 25 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கண்காணிப்பு மையம்’ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:"சுதந்திர போராட்டம் என்றால் என்ன என்று பிரிட்டனுக்கு தெரியும்" - பிரதமர் ரிஷி சுனக்

ABOUT THE AUTHOR

...view details