தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஸ்டெபானியா மெராசினியானு; ரோமானிய இயற்பியலாளரின் பிறந்தநாளுக்கு டூடுல் வெளியிட்ட கூகுல்! - ரோமானிய இயற்பியலாளர் ஸ்டெபானியா மெராசினியானு

ரோமானிய இயர்பியலாளரான ஸ்டெபானியா மெராசினியானுவின் 140 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கூகுல் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

ஸ்டெபானியா மெராசினியானு
ஸ்டெபானியா மெராசினியானு

By

Published : Jun 18, 2022, 12:04 PM IST

Updated : Jun 18, 2022, 12:23 PM IST

ஸ்டெபானியா மெராசினியானு ரோமானிய நாட்டை சேர்ந்த இயர்பியலாளர் ஆவார். இவர் ரோமானிய நாட்டின் தலைநகரான புக்குரெஸ்டில் 1988ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி பிறந்தவர். ரேடியோ கதிரியக்கம் குறித்து முதன் முதலில் ஆராய்ச்சியை தொடங்கி கதிரியக்க செயல்பாடுகளை கண்டறிந்தவர். கதிரியக்கம் தொடர்பான கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் முன்னோடியாக இருந்த பெண்களில் மெராசினியானுவும் ஒருவர்.

புக்குரெஸ்டில் உள்ள பெண்களுக்கான மத்திய பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஸ்டெபானியா மெராசினியானு அங்கு இருந்த போது,ரோமானிய அறிவியல் அமைச்சகத்திடம் இருந்து உதவித்தொகை பெற்றார். பின்னர் பாரிஸில் உள்ள ரேடியம் நிறுவனத்தில் ஆராய்ச்சியைத் தொடர முடிவு செய்தார்.

அப்போது இயற்பியலாளர் மேரி கியூரியின் ரேடியம் நிறுவனம், கதிரியக்க ஆய்வுக்கான உலகளாவிய மையமாக மாறிக் கொண்டிருந்தது. கியூரி கண்டுபிடித்த பொலோனியம் குறித்து தனது பிஹெச்டி ஆய்வறிக்கையில் மெராசினானு பணியாற்றத் தொடங்கினார்.

அங்கு மெராசினானு தனது வாழ்வின் பெரும்பலான நேரத்தை செயற்கை மழையைப் பற்றி ஆராய அர்ப்பணித்தார். தனது ஆராய்ச்சி முடிவுகளை சோதிக்க அல்ஜீரியாவிற்கு பயணம் செய்தார். பூகம்பங்களுக்கும் மழைப்பொழிவுக்கும் உள்ள தொடர்பை அவர் ஆய்வு நடத்தி நிலநடுக்கத்திற்கு வழிவகுக்கும் பூமியின் மையத்தில் கதிரியக்கத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

1935ஆம் ஆண்டில், மேரி கியூரியின் மகள் ஐரீன் கியூரி மற்றும் அவரது கணவர் செயற்கை கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தற்கு கூட்டு நோபல் பரிசைப் பெற்றனர்.மெராசினியானு நோபல் பரிசுக்கு போட்டியிடவில்லை, ஆனால் கண்டுபிடிப்பில் அவரது பங்கு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கேட்டார்.

1936ஆம் ஆண்டில் ரோமானியாவின் அகாடமி ஆஃப் சயின்சஸ் மெராசினியானுவின் பணியை அங்கீகரித்து. அங்கு அவர் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் கண்டுபிடிப்புக்கான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறவில்லை.

இதையும் படிங்க:லதா மங்கேஷ்கருக்கு மணற்சிற்ப அஞ்சலி

Last Updated : Jun 18, 2022, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details