சோச்சி: சர்வதேச அணுசக்தித் துறையின் கண்காட்சி ரஷ்யாவின் சோச்சி நகரில் இன்று தொடங்குகிறது. கரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்ட நிகழ்வு மீண்டும் நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான நிகழ்வை ரஷ்ய அணுசக்தி நிறுவனமான Rosatom நடத்துகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷ்யாவில் மீண்டும் கூட்டம் நடைபெறும் நிலையில், இந்தியா தரப்பில் 3 பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியைத் தொடர்ந்து வணிக ரீதியிலான உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. மேலும் அணுசக்தித் துறையில் நிலவும் சவால்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச அணுசக்தி துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள், அணுசக்தி சார்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு நவீன தொழில்நுட்பகளை காட்சிப்படுத்துகின்றன. இந்தியா சார்பாக மத்திய அணுசக்தித் துறையின் அணு கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல் பிரிவின் தலைவர் டாக்டர் அருண் குமார் நாயக், உள்ளிட்ட 3 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள கூடன்குளம் அணுமின் நிலையத்தில், ரஷ்யாவின் ஆயிரம் மெகாவாட் கொண்ட இரு ஆலைகள் மூலம் உற்பத்தி நடைபெறுகின்றன. மேலும் நான்கு கட்டுமானப் பணியில் உள்ள 4 அலகுகள் ரஷ்யாவின் Rosatom நிறுவனத்தின் கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:இந்திய தேர்தல் ஆணையராக பதவியேற்றார் அருண் கோயல்!