கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத அவல நிலையை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இலங்கை-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது, இந்த சூழலில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரகள் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிலும் திரண்டனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா போராட்டக்காரர்கள் மைதானத்திற்கு உள்ளே செல்லாததால் இலங்கை - ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூன்று டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாட ஆஸ்திரேலிய அணி இலங்கை சென்றுள்ளது. டி20, ஒருநாள் மற்றும் முதல் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையின் பல்வேறு நகரங்களில் திரளான போராட்டக்காரர்கள் திரண்டு வருகின்றனர், இதில் தற்போது பல பிரபலங்கள் அதில் சேரத் தொடங்கியுள்ளனர். போராட்டக்காரர்கள் கூட்டம் அதிகமாக உள்ள ராஷ்டிரபதி பவனில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:இலங்கையில் நெருக்கடி: அதிபர் மாளிகை முற்றுகை... போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு...