வாஷிங்டன்: கடந்த மே மாதம் வரை உலகில் முழுவதும் 74 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆப்பிரிக்காவிலிருந்து பரவிய இந்தத் தொற்று, இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு குரங்கம்மை தொற்று, உலகளாவிய அவசர நிலைக்கு வரவில்லை என்று கூறியது. ஆனால், பல்வேறு நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்துவருவதால், நிலைமையை மறு மதிப்பீடு செய்ய இந்த வாரம் மீண்டும் குழு கூடியது.