தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

literature nobel prize 2023: இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறுகிறார் நார்வே நாட்டை சேர்ந்த ஜான் ஃபோஸ்! - literature nobel prize 2021

2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபோஸ் பெறுகிறார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 8:34 PM IST

ஸ்டாக்கோம்: 2023இன் இலக்கியத்திற்கான நோபல் பரிசை நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபோஸ் “for his innovative plays nad prose which give voice to the unsayable" என்ற நூலுக்காகப் பெற்றார். ஜான் ஃபோஸ் நாடக கலைஞராக 1999இல் 'nokon kjem til a komme' என்ற நாடகம் மூலம் தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். ஜான் ஃபோஸ் பல்வேறு நாடக வசனங்கள், நாவல்கள், கட்டுரைகள், குழந்தைகள் புத்தகம் எனப் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.

ஜான் ஃபோஸ் மனித வாழ்க்கைக்கு நெருக்கமான பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் மனித உணர்ச்சிகளை எளிதாகப் புலப்பட வைக்கும் தன்மை கொண்டதாகும். கடந்த 2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அன்னி எர்னக்ஸ் என்பவருக்கு “for the courage and clinical acuity with which she uncovers the roots, estrangements and collective restraints of personal memory" என்ற நூலுக்காக வழங்கப்பட்டது.

முன்னதாக 2021ஆம் ஆண்டு அப்துல் ரசாக் குர்னா என்பவருக்கு " for his uncompromising and compassionate penetrition of the effects of colonialism and the fate of the refugee in the gulf between cultures and continents" என்ற நூலுக்காக நோபல் பரிசு பெற்றார். அதற்கு முன் 2020ஆம் ஆண்டு இலக்கியத் துறையில் லூயிஸ் குளுக் என்பவருக்கு " for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal" என்ற நூலுக்காக வழங்கப்பட்டது.

இலக்கிய நோபல் பரிசு குறித்து சில சுவாரஸ்ய குறிப்புகள்

1901ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக 115 நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

4 இலக்கிய நோபல் பரிசை 2 பேர் பகிர்ந்து கொண்டனர்.

115 பேரில் 17 பெண்களுக்கு இலக்கியத் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இலக்கியத் துறையில் குறைந்தபட்ச வயதில் நோபல் பரிசு வென்றவர் ருட்யார்ட் கிப்ளிங் (41 வயது) ஆவார். அதே நேரத்தில் இலக்கியத் துறையில் அதிகபட்ச வயதில் நோபல் பரிசு வென்றவர் டோரிஸ் லெஸ்ஸிங் (81 வயது) ஆவார்

இதையும் படிங்க: Asian Games Archery: இந்தியாவுக்கு தங்கம்! வில்வித்தையில் மகுடம் சூடிய சிங்கப் பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details