நியூயார்க்:அமெரிக்காவின் ஹார்வர்டு சட்டப்பள்ளியில் பயிலும் சட்ட மாணவர்களால் பதிப்பிக்கப்பட்டு வெளியாகும் இதழ், தி ஹார்வர்டு லா ரிவ்யூ (The Harvard Law Review). இதனை 1887ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இணை நீதிபதியான, லூயிஸ் டி.பிராண்டிஸ் உருவாக்கினார். இந்த இதழில் பல்வேறு சட்ட ரீதியான ஆராய்ச்சி கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன.
முக்கியமாக இந்த இதழில் எழுதப்பட்ட முதல் கறுப்பின தலைவர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றுள்ளார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்த இதழ், தற்போது 137வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தி ஹார்வர்டு லா ரிவ்யூ இதழின் 137வது தலைவராக அப்சரா ஐயர் தேர்வாகி உள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.