பெர்லின்:உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பயணிகள் ரயில் சேவை ஜொ்மனி நாட்டின் லோயர் சாக்சோனியில் நேற்று (ஆக 24) தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் இயங்கும் 14 டீசல் ரயில்களுக்கு பதிலாக ஹைட்ரஜன் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களை அல்ஸ்டாம் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தரப்பில், "இந்த திட்டம் ஒரு முன்மாதிரியான திட்டம்.
உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை ஜெர்மனியில் தொடக்கம் - உலகில் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் சேவை ஜெர்மனி
உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் சேவை ஜெர்மனி நாட்டின் லோயர் சாக்சோனியில் தொடங்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சோதனை ஓட்டங்களுக்கு பின் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான மொத்த செலவு சுமார் 93 மில்லியன் யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ.737 கோடி). இந்த ரயில்கள் மூலம் கார்பன் உமிழ்வு ஆண்டுக்கு 4,400 டன்கள் குறையும். ரூ.1000 கோடிக்கும் மேல் பணம் மிச்சமாகும். இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கி.மீ. எதிர்காலத்தில் டீசல் ரயில்களை குறைக்க உள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பைக்... உ.பி. இளைஞர் அசத்தல்...