அமெரிக்கா:வாஷிங்டனில் நடைபெறும் உலக கலாச்சார விழாவில் 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், 'ஒரு உலக குடும்பம்' என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில் 'உலக கலாச்சார விழா 2023' வாஷிங்டன் நகரில் நடைபெறுகிறது. வாஷிங்டனில் முதல்முறையாக மிகவும் பிரமாண்டமாக நடந்த இவ்விழாவில் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்றனர்.
மனிதநேயம், அமைதி மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் இந்த திருவிழாவில் 180 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உலகின் முக்கிய தலைவர்கள், கிராமிய விருது பெற்றவர்கள் மற்றும் பிற புகழ் பெற்ற கலைஞர்களின் வசீகரிக்கும் இசை மற்றும் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் இந்த ஒரு உலக குடும்பம் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தன.
இதில் பேசிய இந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், “அமைதியை வலியுறுத்தும் விதமாக, நமது பன்முகத்தன்மையை கொண்டாடும் இந்நிகழ்ச்சி மனித விழுமியங்களின் அடிப்படையான ஒற்றுமையை எடுத்துரைக்கிறது. இதனால், அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி புன்னகை செய்ய வைப்போம். அது தான் மனிதநேயம், அதைத்தான் நாம் செய்கிறோம்.
ஞானத்தால் ஆதரிக்கப்படாவிட்டால் எந்த கொண்டாட்டமும் ஆழம் பெறாது. மேலும் அந்த 'ஞானம்' நம் அனைவருக்கும் உள்ளது. நாம் அனைவரும் தனித்துவமானவர்கள், நாம் அனைவரும் ஒன்று என்பதை அங்கீகரிப்பதே ஞானம்' எனத் தெரிவித்தார். கிராமி விருது வென்ற சந்திரிகா டாண்டன் மற்றும் 200 கலைஞர்களின் அமெரிக்கா தி பியூட்டிஃபுல் மற்றும் வந்தே மாதரம், பஞ்சபூதம், 1,000 பேர் கொண்ட இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் கிளாசிக்கல் சிம்பொனி, 1,000 எம்பி உலகளாவிய கிட்டார் போன்ற வசீகர நிகழ்ச்சிகள் சிறப்பாக பார்வையாளர்களைக் கடந்தது.
ஒத்துழைப்பும் ஒற்றுமையும் அவசியம்: இதில் பங்கேற்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "நாம் அனைவரும் செழிப்பை விரிவுபடுத்தவும், இயற்கையை ஒடுக்கும் சவால்களை நாம் எதிர்கொள்வதும் இயற்கையானது. இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்டவை.