டெல்லி:இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக வரும் 21ஆம் தேதி இந்தியா வருகிறார். இதுகுறித்து போரிஸ் ஜான்சன் "இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பொருளாதார சக்தியாகவும் உள்ளது.
இங்கிலாந்து நாட்டிற்கு மிகவும் மதிப்புமிக்க நட்பு நாடாக உள்ளது. இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அமையும்" என்று தெரிவித்தார்.
அந்த வகையில், போரிஸ் ஜான்சன் 21ஆம் தேதி குஜராத் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதையடுத்து இரண்டாவது நாள் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார்.
இந்த பேச்சு வார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு, உக்ரைன், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தாண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 'மோடி உண்மை பேச மாட்டார், பேசவும் விடமாட்டார்' - ராகுல் காந்தி தாக்கு