ஆப்கான் சிறப்புப் படைப்பிரிவு நடத்திய தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்தத் தலைவராக அறியப்படும் அபு முஷின் அல் மஸ்ரி சமீபத்தில் கொல்லப்பட்டார். இவர் 1980களில் அல்-கொய்தாவில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கினார் மற்றும் அல்-கொய்தா தலைவராக இருந்த அய்மான் அல்-ஜவாஹிரியின் நம்பகமான உதவியாளராக இருந்தார்.
இந்நிலையில், யாசின் ஜியா கூறுகையில், "தாலிபான் பயங்கரவாதிகள் இன்னமும் அல்கொய்தாவுடனான உறவுகளைத் துண்டிக்கவில்லை. பிராந்தியத்தில் உள்ள மற்ற பயங்கரவாத குழுக்களுடனும் தாலிபான் அமைப்புக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் ஹெல்மாண்டில் ஒன்றிணைந்து வேலை செய்வது தெளிவாகத் தெரிகிறது" எனத் தெரிவித்தார்