டெல்லி: இந்திய - அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கூறியதாக பிரபல பன்னாட்டு ஊடகம் பகிர்ந்து உள்ள வீடியோவில், "ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான் 3 விண்கலத்திற்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். குட் லக். நாங்கள் உனக்கு (சந்திரயான் 3 விண்கலம்) உற்சாகத்தைக் கொடுக்கிறோம்" என தெரிவித்து உள்ளார்.
மேலும், துருவ கலவைகள் மற்றும் வரலாற்றுப் பதிவை நிலவு, விக்ரம் லேண்டர் உதவி உடன் கொடுக்க உள்ளது எனவும் சுனிதா வில்லியம்ஸ் கூறி உள்ளார். சுனிதா வில்லியம்ஸ், இரண்டு விண்கலங்களில் 322 நாட்களை விண்வெளியில் கழித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தானியங்கி லேண்டிங் வரிசையைத் தொடங்குவதற்கு அனைத்தும் (Automatic Landing Sequence) தயாராக உள்ளது. இன்று மாலை 5.44 மணியளவில் லேண்டர் தொகுதி (Lander Module), அதன் நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு வருகை தர காத்திருக்கிறது. தானியங்கி லேண்டிங் வரிசையிடம் இருந்து வரும் கட்டளையைத் தொடர்ந்து, லேண்டர் தொகுதி இன்ஜின்களை இயக்கும்.
இந்த செயல்திட்டக் குழு இதனைத் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து கொண்டே இருக்கும். இதன் நேரலை 5.20 மணிக்கு தொடங்க உள்ளது” என இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ‘X' வலைதளப் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.