தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் பீதி

இந்தோனேசியாவில் மேற்கு கடல்பகுதியில் 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Strong
Strong

By

Published : Aug 29, 2022, 2:21 PM IST

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் மேற்கு கடல்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சைபரட் தீவுப்பகுதியில் அதிகளவு உணரப்பட்டது. 6.4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அங்கிருந்த மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று 5.9 மற்றும் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களும் மெண்டவாய் தீவுப்பகுதியில் ஏற்பட்டன. கடந்த பிப்ரவரி மாதத்தில், சுமத்ரா பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25 பேர் உயிரிழந்தனர், 460-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில், சுலவேசி மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், சுமார் 6 ஆயிரத்து 500 பேர் காயமடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details