ஜகார்த்தா:இந்தோனேசியாவின் மேற்கு பிராந்தியத்தில் இன்று (ஜனவரி 16) 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதமோ, உயிரிழப்புகளோ பதிவாகவில்லை. அதேபோல சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இந்த நிடுநடுக்கம் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில் ஆச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் 2.7 கோடி மக்கள் உள்ளனர். பசிபிக் பெருங்கடலில் உள்ள பெரும்பாலான உயிருள்ள எரிமலைகள் இந்தோனேசியாவில் உள்ளன. இதன் காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.
கடந்தாண்டு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 331 பேர் உயிரிழந்தனர். 600 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல 2018ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 4,340 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:Nepal plane crash: 5 இந்தியர்கள் உள்பட 72 பேர் விமான விபத்தில் பலி எனத் தகவல்!