தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Sri lanka Crisis: பயமா இருக்கா, இன்னும் பயங்கரமா இருக்கும்- எச்சரிக்கும் இலங்கை வங்கி - இலங்கை மத்திய வங்கி

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாகும் என அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Srilanka Crisis: ’அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிவிடும் ..’- நந்தலால் வீரசிங்க
Srilanka Crisis: ’அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிவிடும் ..’- நந்தலால் வீரசிங்க

By

Published : May 11, 2022, 5:47 PM IST

Updated : May 11, 2022, 5:53 PM IST

கொழும்பு: அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் தான் பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மத்திய வங்கியில் இன்று (மே11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாராயினும் நாடு தொடர்ந்தும் வீழ்ச்சிப் பாதையிலேயே பயணித்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அதன் பின்னரான வன்முறைச் சம்பவங்களையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாக ஏற்பட்டிருந்த சிறிய அளவிலான முன்னேற்றமும் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், கூடிய விரைவில் ஏதேனுமொரு முறையில் நிலையான அரசாங்கமொன்றை மக்கள் பிரதிநிதிகள் உருவாக்க வேண்டும் எனவும் நாட்டில் நிலையான மற்றும் ஸ்திரத்தன்மையான ஆட்சியொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் மின் விநியோகத் தடை பல மணி நேரங்களுக்கு நீடிக்கும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய அமைதியின்மையை முற்றிலுமாக நிறுத்தி, நாட்டை இயல்புநிலைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இது தொடர்பில் பொதுமக்களும் உணர்ந்து செயற்பட வேண்டுமென நாட்டின் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற அடிப்படையில் மத்திய வங்கி வலியுறுத்துவதாக அதன் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தப்பியோடிய ராஜபக்ச குடும்பம்... பட்டாசு வெடித்த கோயம்புத்தூர்வாசிகள்...

Last Updated : May 11, 2022, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details