கொழும்பு:இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு, பல்லேகம சுமன தேரர். இவர் இலங்கையில் உள்ள நவகமுக என்னும் பகுதியில் அமைந்து உள்ள தனியார் ஓட்டல் அறை ஒன்றில், தாய் மற்றும் அவரது மகள் உடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர் தங்கி இருந்த அறைக்குள் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென நுழைந்து உள்ளது.
இதனையடுத்து இந்த 8 பேர் கொண்ட கும்பல் புத்த பிட்சு, அங்கு இருந்த தாய் மற்றும் அவரது மகளையும் தாக்கி உள்ளது. மேலும் புத்த பிட்சுவையும், இரு பெண்களையும் நிர்வாணமாக்கியும் அவர்கள் தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் தற்போது இலங்கையில் பேசு பொருளாக மாறி உள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர், இலங்கை அரசியல் பிரமுகர்கள் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்.
குறிப்பாக, ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜ பக்சே ஆகியோருக்கும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். இந்த தாக்குதல் சம்பவத்தில் புத்த பிட்சு மற்றும் இரண்டு பெண்கள் காயம் அடைந்து உள்ளனர். பின்னர் காயம் அடைந்த 2 பெண்கள் மற்றும் புத்த பிட்சு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.