225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் 145 இடங்களை வென்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (எஸ்.எல்.பி.பி) வெற்றி பெற்றது.
இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது - கோட்டபய ராஜபக்ச
கொழும்பு : ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று (ஆகஸ்ட் 12) பதவியேற்றது.
இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது !
இதையடுத்து, இலங்கை குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்ச முன்பு உறுதிமொழிந்து பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். அவரை தொடர்ந்து 25 பேர் அமைச்சர்களாகவும், 39 பேர் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த விழா கண்டியில் உள்ள தலதா மாளிகை மகுல்மடுவ மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சிங்கள பௌத்த மகாசங்கத்தினர் பிரித் ஓதி அமைச்சர்களை ஆசீர்வசித்தனர்.