கொழும்பு(ஸ்ரீலங்கா): இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து சனிக்கிழமை நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக, உயர் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் AFP செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
73 வயதாகும் கோத்தபய பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களின் போராட்டத்தால் வலுக்கட்டயமாக இலங்கையை விட்டு வெளியேறினார். இலங்கையின் நெருக்கடிக்கு கோத்தபயவே காரணம் எனக்கூறி, பொதுமக்கள் அவரது அலுவலகத்தை கடந்த ஜூலை மாதம் ஆக்கிரமித்தனர். இதனையடுத்து ராணுவத்தின் உதவியுடன் அவர் இலங்கையை விட்டு தப்பியோடினார்.
அவர் சிங்கப்பூரில் இருந்து பாங்காக் செல்வதற்கு முன் ராஜினாமா செய்ததாக அறிவித்தார். கோத்தபயவின் வருகை குறித்து தகவல் அளித்த , கோத்தபய ஒரு கைதியாக தாய்லாந்து ஹோட்டலில் வசித்து வருகிறார். மேலும் அவருக்கு திரும்பி வர ஆர்வம் இருப்பதாகவும் கூறினார். மேலும் நாளை கோத்தபய திரும்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தபய இலங்கை திரும்பிய பிறகு அங்கு அவரைப் பாதுகாக்க, தனியாக பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்பிரிவு ராணுவம் மற்றும் காவல்துறை கமாண்டோக்களைக்கொண்டுள்ளது.